"தயவுசெய்து தன்னை மன்னிக்குமாறும் தாம் எந்தக் கட்சியையும் சேர்ந்தவரில்லை" என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோவை அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர் சீனிவாசன் வருத்தம் தெரிவித்தார்.
தங்கள் மனதைப் புண்படுத்தும்படி பேசியதால் இரவு முழுவதும் தூக்கமே இல்லை என்று கூறிய சீனிவாசன், எழுந்து நின்று நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்புக் கோரினார்.
"ஹோட்டலில் சாப்பிட்டவர்கள் பற்றி, நல்லதோ கெட்டதோ வெளியில் பேசக்கூடாது" என சீனிவாசனுக்கு அறிவுரை வழங்கிய நிர்மலா சீதாராமன், எடுத்த எடுப்பில் நீங்கள் உங்கள் எம்எல்ஏ ஜிலேபி சாப்பிடுறாங்க, சண்டை போடுறாங்க, ரெகுலராக வருவாங்க என சொன்னவுடன் எனக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை என்றார்.
ஜிஎஸ்டி பற்றி என்ன கேட்டாலும் பதில் சொல்லி இருப்பேன் என்று கூறிய நிர்மலா சீதாராமன், அமைச்சர்கள் குழுவினர்தான் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று நேரில் பார்த்து ஜிஎஸ்டி குறித்து முடிவு செய்வார்கள் எனவும் அவருக்கு விளக்கமளித்தார்.